பாரத சாரண சாரணிய இயக்கம் மதுராந்தகம் சிந்த தனை மற்றும் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில்
சிந்தனை நாள் விழா மற்றும் பேரணி 22-02-2025 இன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு சாரண சாரணிய இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன் பவல் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சிந்தனை நாள் விழா சுற்றுப்புற சூழ்நிலை, இயற்கை பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்கார விழிப்புணர்வு பேரணி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் எதிரேமதுராந்தகம் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் அங்கயர் கன்னி, மதுராந்தகம் நகராட்சி ஆணையர் T.அபர்ணா ஆகியோர்களால். கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
இப்பேரணி ஏரி காத்த ராமர் கோயிலில் வளாகத்தில் தொடங்கி தேரடி சாலை மற்றும் மருத்துவமனைச் சாலை வழியாக மீண்டும் ராமர் கோவிலை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் V. திரு குமரன், மாவட்டத் துணைத் தலைவர் திரு விஜயன், மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் திரு I. சாமி அடியான் ALT(S), மாவட்ட சாரண ஆணையர் பீட்டர் ராஜா மாவட்ட சாரணிய ஆணையர் விஜயகுமாரி மாவட்ட பொருளாளர் திரு சுரேஷ் மற்றும் மதுராந்தகம் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிகள் இருந்து 800 சாரண சாரணியர்களும் 50 சாரண சாரணிய ஆசிரியர்களும் மற்றும் மாவட்ட குழு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழா முடிவில் அனைத்து சாரண சாரணியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.