சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து விநாயகபுரத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி ஆட்டோ டீசல் ஒர்க்ஸ் பட்டறையில் வேலை செய்வதற்காக நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு லாரிகளில் நேற்றைக்கு முதல் நாள் இரவு 4 பேட்டரிகள் மார்பு நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சேகர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் விநாயகபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு பேர் நின்று இருந்த நிலையில் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தனலட்சுமி ஆட்டோ ஒர்க்ஸில் பேட்டரி திருடியது தெரியவந்தது.
இதில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரத்குமார் மற்றும் ராமநாயக்கன்பாளையம் ஊத்து மேடு பகுதியை சேர்ந்த காட்டு ராஜா மகன் மணிகண்டன் என்பது தெரிய வந்தது.இரண்டு பேரையும் காவல்துறைனர் கைது செய்தனர்..

தொடர்புடைய செய்திகள்