ராமநாதபுரம் மாவட்டம்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், எல்ஐசியில் உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், பொதுத்துறைகளை பாதுகாக்க கோரியும் , விவசாயத்தையும் , விவசாய தொழிலாளர்களையும் பாதுகாப்போம் எனவும் , முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கூடாது.
ராமநாதபுரம் மாவட்டம்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், எல்ஐசியில் உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், பொதுத்துறைகளை பாதுகாக்க கோரியும் , விவசாயத்தையும் , விவசாய தொழிலாளர்களையும் பாதுகாப்போம் எனவும் , முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கமும் கலந்து கொள்கிறது. இதையொட்டி ராமநாதபுரம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் கிளை தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது . கிளை பொறுப்பாளர் அருணாச்சலம் சிறப்புரை ஆற்றினார். மகளிர் பொறுப்பாளர் பிரியா சிவகுமார் நன்றி கூறினார்.
