நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில்மாவட்ட எஸ்பி பங்கேற்பு
நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில்
மாவட்ட எஸ்பி பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்
கடந்த நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
15 வேளாண் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் 1000 க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், பெண்களுக்கு வாலிபால், கபடி, எரிபந்து,
கோ-கோ,செஸ், கேரம், பூப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட்,கைப்பந்து, கபடி,
கால்பந்து, பூப்பந்து, கேரம்,
செஸ்,டேபிள் டென்னிஸ்
போன்ற போட்டிகள் நடைபெற்றது.இதன் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட எஸ்பி G.சந்தீஸ் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். மேலும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் அதற்கான சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் அகமதுயாசின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திருவேணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இப்போட்டியினை நரேஷ் மற்றும் நீதிராஜா மற்றும் உடற்கல்வி இயக்குநர் தர்மமுனிஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்
கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் மற்றும் மாணவிகள் கோ-கோ,
கபடி, டேபிள் டென்னிஸ்
உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்
