கமுதியில் SDPI கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் கமுதி SDPI கட்சி அலுவலகத்தில் தொகுதி தலைவர் V.S.ரிஸ்வான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உமர் பாரூக், தொகுதி செயலாளர் செய்யது அலி முத்து, தொகுதி அமைப்புச்செயலாளர் நவாப் இப்றாகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழிச்சிமிக்க இந்நிகழ்ச்சியில் அபிராமம் நகர் தலைவர் முஹம்மது சுலைமான் சேட், நகர் செயலாளர் பிர்தௌஸ் , கமுதி நகர் தலைவர் அல்லா பிச்சை, நகர் செயலாளர் சேக் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரமக்குடி தொகுதி வளர்ச்சி தொடர்பாகவும், மக்கள் நல பணிகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கமுதி அரசு மருத்துவமனை கழிவுகளை தினசரி அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கமுதி-பக்கிர் அம்பலம் தெரு மற்றும் புது பாவடி தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக செயல்பட்டுவந்த போர்வெல் குழாய் இணைப்பை சரிசெய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்

பரமக்குடி தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை
அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்

அபிராமம் நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைத்திட முன்னுரிமை அளித்திட வேண்டும்.மேலும் மேற்படி சுகாதார நிலையத்தில் சிறுநீரக சிறப்பு மருத்துவர் நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் நிறைவாக தொகுதி அமைப்புசெயலாளர் நவாப் இப்ராஹீம் நன்றி கூறினார்

தொடர்புடைய செய்திகள்