தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் :- ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்தார்.


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 14வது புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார்.
புதிய ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்