பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்பட்டமளிப்பு விழா.
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி அருகே பேரையூரில்
உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி
தலைவர் அகம்மதுயாசின் தலைமை தாங்கி, விழாவினை துவங்கி வைத்தார். இக்கல்லூரியின் முதல்வர் ராமர் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவர்கள்
வேளாண்மை துறையில் உயர்கல்வி பயின்று பல்வேறு உயர்துறைகளில்
பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.வேளாண் படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வேளாண் துறையில் பட்டம் பெற்ற பலரும் அரசு உயர் பதவிகள் மற்றும் தொழில் அதிபர்களாக இருப்பதாக கூறினார், அரசு தேர்வுகளான டிஎன்பிசி, யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளை வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும் என எடுத்துரைத்தார். வரும் காலங்களில் வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் உணவு உற்பத்தியில் மிகவும் முக்கிய புள்ளிகளாக திகழ்வார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் 2015, 2017, 2018 மற்றும் 2019 ஆண்டு மாணவ, மாணவிகள் சுமார் 154 பேருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவினை பேராசிரியர் திருவேணி ஒருங்கிணைத்தார்.

