பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, புது அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் இன்று (01.07.2025) தொடங்கி வைத்தார்.
பின்னர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் போற்றும் மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு புதிய திட்டப் பணிகளை கிராமப் பகுதிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில்தான் இன்று ஆலத்தூர் மேற்கு பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக இப்பகுதியிலுள்ள மக்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்பெறுவர்.
தொடர்ந்து, நாட்டார்மங்கலம், செட்டிக்குளம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.10.19 லட்சம் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டிடம் திறக்கப்பட்டு இன்று முதல் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்னர், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தன் கீழ் செட்டிக்குளம் முதல் வாழையூர் வரை கீழ் ரூ. 75.81 லட்சம் மதிப்பீட்டிலும், செட்டிக்குளம் முதல் புது அம்மாபாளையம் வரை ரூ.325 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவிலங்கை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், புது அம்மாபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணியினையும் அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.பாண்டியன், துணை பதிவாளர் (பொ.வி.தி) திரு.சிவக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சுந்தரராமன், அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்