சேலம் மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு வைப்புத்தொகை, சாலை பராமரிப்பு கட்டணம் மற்றும் மேற்பார்வை கட்டணம் ஆகியவை இதுவரை ஒரே தவணையில் பெறப்பட்டு வந்தன.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு வைப்புத்தொகை, சாலை பராமரிப்பு கட்டணம் மற்றும் மேற்பார்வை கட்டணம் ஆகியவை இதுவரை ஒரே தவணையில் பெறப்பட்டு வந்தன. தற்போது புதிய இணைப்புகள் பெற வைப்புத்தொகை 10 தவணைகளில் செலுத்த வழி வகை செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் விண்ணப்பித்த உடன் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். பின்னர் 10 தவணைகளாக வைப்புத்தொகையை செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
