மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் 32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் 32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் இன்று (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 0 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் திருமதி மா.சாரதாதேவி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி சபர்மதி, அறங்காவலர்கள் குழுத்தலைவர் திரு.வள்ளியப்பா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
