தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் குடந்தை தாராசுரம் கடைவீதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் குடந்தை தாராசுரம் கடைவீதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஜூலை 3,ஆம் தேதி முதல், மொபைல் செயலி மூலம் மக்களை தேடி, “மண், மொழி, மானம், காக்க” என்ற ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற முன்னெடுப்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் இது திமுகவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும், புதிய அணிகளை உருவாக்கவும் உதவக்கூடிய முயற்சி, இந்த செயலி மூலம் மக்கள் தங்களது ஆதரவை எளிதாகப் பதிவு செய்து, திமுகவின் அடிப்படை உறுப்பினராக மாறலாம், இதுவே, திமுகவின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகவும், தங்களைச் சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளை தீர்க்க ஒரு தகுந்த வழியாகவும் அமையும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க,அன்பழகன் தெரிவித்தார்,

தொடர்புடைய செய்திகள்