பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து, வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை இன்று (04.07.2025) வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் 2025-26 ஆம் ஆண்டிற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், விவசாய பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பூச்சிக்கொல்லி தொடர்பான விழிப்புணர்வு நாட்காட்டியினை வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது வயத “மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்றார் திருவள்ளுவர். அதாவது, உடலுக்கு ஒத்துப் போகாத உணவை மறுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் உணவை மட்டும் உட்கொண்டால், உடலில் வாழும் உயிர் வேதனை உடையாது என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் கூறியுள்ளார்.
மக்கள் நலமும், நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. உடலைப் பேணுவது என்பது ஒருவரது கடமை, உடலை நோயற்ற நிலையில் வைத்திருந்தால் ஆயுளை அதிகரிக்கும். நாம் நம் உடல் நலம் பேண ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வது அவசியமாகும். ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களின் தினசரி தேவை சராசரியாக 400 கிராம் ஆகும். ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள 4 வட்டங்களைச் சேர்ந்த 15,250 குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைத்திடவும் அன்றாட காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.60 மதிப்பில் (தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள்) 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ.9,15,000 மதிப்பீட்டில் நூறு சதவீத மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பயனளிக்கும் வகையில், ரூ.100 மதிப்பீட்டில் (பப்பாளி, கொய்யா, எலுமிச்சை) 3 வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்புகள் 9,400 குடும்பங்களுக்கு ரூ.9,40,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. மேலும் புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் இல்லம் தோறும் வளர்க்கும் பொருட்டு பயறு விதைகள் அடங்கிய 2,000 தொகுப்பு ரூ.1,34,000 மதிப்பீட்டில் 100% மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் தொகுப்புகள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் உணவு தன்னிறைவு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து தன்னிறைவையும் மிக விரைவில் அடையும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தினை முறையாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.செ.பாபு, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் திருமதி.மு.சத்யா, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர்கள் திருமதி.செல்வ பிரியா, திருமதி.செல்வகுமாரி அட்மா தலைவர் திரு.வீ. ஜெகதீசன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் திருமதி.சங்கீதா ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்