தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு ரத வீதியில் கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திரக்குழியில் இணைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்கள் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு ரத வீதியில் கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திரக்குழியில் இணைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்கள் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா,திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
