நன்மங்கலம் பகுதியில் அடக்கஸ்தலம் அமைத்துதர வேண்டி இஸ்லாமியர்கள்அமைச்சரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில்,நன்மங்கலம் பகுதியைச் சார்ந்த இஸ்லாமியர்கள் கல்லறை வேண்டி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தாம்பரம் வட்டத்திற்குபட்ட நன்மங்கலம் பகுதியைச் சார்ந்த 50 க்கும் மேபட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள்,தங்கள் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிப்பதாகவும்,இப்பகுதி மக்களுக்கு அடக்கஸ்தலம் இல்லையென்றும்,இப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு (கபஸ்தலம்) மயானம் அமைத்து வேண்டுமென அமைச்சரிடம் மனுவை அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார் .
