ராமநாதபுரம் மாவட்டம்.அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொது வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம்.
அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொது வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்
LPF, CITU, AITUC உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் LPFமாவட்டச் செயலாளர் மலைக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச பொதுச் செயலாளர் Dr.பச்சை மால்,மின்கழக தொமுச மாநில இணைச்செயலாளர் வி.சி.மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவர் கே. காஞ்சி,தொமுச டாஸ்மாக் மாவட்ட செயலாளர் எம்.எஸ். ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மத்திய ஒன்றிய அரசை எதிர்த்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
