பொது அடக்க ஸ்தலம் வேண்டி கிறிஸ்துவர்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர்.

பொது அடக்க ஸ்தலம் வேண்டி கிறிஸ்துவர்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில்,கோவிலம்பாக்கம் கிறிஸ்தவ நல சங்கம் சார்பாக பொது கல்லறை வேண்டி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் கிறிஸ்துவ மக்கள் நலச்சங்கம் சார்பில் கோவிலம்பாக்கம்,நன்மங்கலம் பகுதியைச் சார்ந்த 300 க்கும் மேபட்ட கிறிஸ்துவ மக்கள் தங்களுக்கு பொது கல்லறை வேண்டுமெனவும்,ஏற்கனவே தாங்கள் சுற்று பகுதியில் உள்ள கல்லறையில் இறந்த கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்து வந்த நிலையில்,தற்பொழுது அங்கே அடக்கம் செய்ய கூடாது என கூறுவதால் ,தங்களுக்கு பொது கல்லறை கேட்டு அமைச்சரிடம் மனுஅளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் இதில் கோவிலம்பாக்கம் கிறிஸ்தவ நல சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்திகள்