பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் நடைபெற்றமக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம்
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் நடைபெற்ற
மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் இன்று (09.07.2025) நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
உங்களின் கோரிக்கைகளை நீங்கள் இருக்கும் இடத்திற்கு அரசு அலுவலர்கள் அனைவரும் வந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்படுவதே மக்கள் தொடர்புத்திட்ட முகாம்கள். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் நோக்கம், அவற்றைப்பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் , எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விரிவாக தகவல்களை அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் இங்கே உங்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறார்கள். கொட்டரை பகுதி பொதுமக்கள், கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை வேண்டி வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும். குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததன் காரணமாகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறையினை ஒதுக்கி, சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உண்டான வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். எனவே பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்பாக, 10.06.2025 அன்று முதல் சிறப்பு குழுவினரால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 79 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முகாமில் வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நத்தம் பட்டா 25 பயனாளிகளுக்கு ரூ.13,00,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை என 24 பயனாளிகளுக்கு ரூ.4,32,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை (வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) சார்பில் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி 06 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டிலும், வட்ட வழங்கல் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்ப்பு திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.1,41,70,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாய பயிர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.11,37,900 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 15 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7,35,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், தாட்கோ சார்பில் முதலசைசரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.6,11,925 மதிப்பிலான கடனுதவியும்,தோட்டக்கலைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1,25,600 மதப்பீட்டிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1,31,712 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் திருமண நலத்திட்டத்தின் கீழ் 04 பயனாளிகளுக்கு ரூ.80,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் வரகு 5 பயனாளிகளுக்கும், நீர்தெளிப்பான் 1 பயனாளிகளுக்கும் என மொத்தம் 06 பயனாளிகளுக்கு ரூ.20,030 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சலவைப்பெட்டி 02 பயனாளிகளுக்கு ரூ.13,104 மதிப்பீட்டிலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் 06 பயனாளிகளுக்கு ரூ12,000 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலி கருவி மற்றும் ஊன்றுகோல் 03 பயனாளிகளுக்கு ரூ.8,366 மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தாது உப்பு கலவை கருவி 05 பயனாளிகளுக்கு ரூ.500 மதிப்பீட்டிலும் என மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,92,78,137 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ந.கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.பாபு, தாட்கோ பொது மேலாளர் திரு.க.கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.வி.வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ரெ.சுரேஷ்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சத்யா, அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன், ஆலத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துக்குமரன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



