ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் இன்று புதிய தலைவர் (ம) புதிய செயலாளர் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் இன்று புதிய தலைவர் (ம) புதிய செயலாளர் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பொறியாளர் மாரி தலைவராகவும்,அல் அமீன் சாதிக் செயலாளராகவும், இவர்களுடன் நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட ஆளுநர் பொறியாளர் தினேஷ் பாபு சிறப்பு விருந்தினராகவும் போலியோ ஒருங்கிணைப்பாளர் Dr.சின்னதுரை அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய உறுப்பினர்களை துணை ஆளுநர் டாக்டர் சோமசுந்தரம் அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து சிறந்த மக்கள் சேவைக்கான விருதினை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன்,சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்னாட்டிக்,தாய் பாசம் அறக்கட்டளை,சிறந்த இயற்கை ஆர்வலர் சுபாஷ் சீனிவாசன்,சிறந்த தொழில் முனைவோர் பயிற்சிக்கான விருது ராமநாதபுரம் எக்கனாமிக் சேம்பர்,சிறந்த சமூக சேவைக்கான விருது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்சிக்கான விருது உள்ளிட்ட 6 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்