கோவை ஸ்ரீ கிருஷ்ணா அதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜீ கரியப்பனவர் கலந்து கொண்டார்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா அதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜீ கரியப்பனவர் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசுகையில் மாணவர்கள் சமூகத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வைப் பரப்பும் தூதர்களாக இருப்பதன் அவசியத்தையும், கல்வி நிறுவனங்கள் இளைய தலைமுறையைக் காக்க முன்னோடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தையும் அவர் வலியுறுத்தினார். விழாவில் துணை ஆணையர் (கலால்)
துறை டாக்டர் பி முருகேசன், கோட்ட(கலால்) அலுவலர்கள் ஜெகதீசன், புனிதா, புகையிலை ஒழிப்பு அலுவலர் டாக்டர் சரண்யா, கல்வி குழும அறங்காவலர் ஆதித்யா, முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பழனியம்மாள் உட்பட 4000ம் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.
