மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு சார்பாக அரசு பள்ளியில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு கல்வி உதவி நலத் திட்டங்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் சுரேஷ் தலைமையில் சிங்கப்பெருமாள் கோவில் அரசு பள்ளியில் கல்வி பயிலக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி நலத் திட்டங்களும் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வுகளை பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில்போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து கல்வி உபகரணங்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தினகரன் மாநில செய்தி தொடர்பாளர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சிங்கை கணேஷ்
அமைப்பின் மாநிலச் செயலாளர் திரு. கான்ஃபிடன் சுரேஷ் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு சிங்கை ஜனார்த்தனன்
சிங்கை கௌரவத் தலைவர் வி எல் எஸ் ரவி
மாநில செயற்குழு உறுப்பினர் திரு. நாராயணன் மற்றும்
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ் ராஜ்குமார் விஷ்வா கார்த்திக்
ஜெபராஜ் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாணவர்களின் குழு உறுப்பினர் அலிசஃ பர் மற்றும்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மக்கள் பொதுநிலை அமைப்புகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் சமூக ஆர்வலர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
