ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே கோவிலாங்குளத்தில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ,கோவிலாங்குளம் காத்தனேந்தல், கொம்பூதி எம்.புதுக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், வேலவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்,
வட்ட வழங்கல் அலுவலர் விஜயா,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திக் வருவாய் ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, சதீஸ்குமார் கிராம நிர்வாக அலுவலர் ராஜபாண்டி,
கிராம உதவியாளர் இப்ராஹீம் கலீல், ஊராட்சி செயலர்கள் ஜெயச்சித்ரா,
சரவணன், மூர்த்தி, ராமஜெயம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை
பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 644 மனுக்கள்
பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது


