பெரம்பலூர் மாவட்டம்கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர் மாவட்டம்கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்பெரம்பலூர் மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளுக்கு ஓராண்டு கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஓராண்டு முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அவ்வாறு பெரம்பலூர் மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக சானறிதழ் எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
இந்த தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தேர்வு நடைபெறுவது தொடர்பாகவும், அடிப்படை வசதி குறித்தும் ஆய்வு செய்து, பயிற்சி பெற்ற அனைவரும் தேர்வு எழுத வந்துள்ளார்களா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று நடைபெற்ற தேர்வில் 75 நபர்கள் தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது, இசைப் பள்ளி ஆசிரியர் திரு.நடராஜன், பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
