வட்டி முழுமையாக தள்ளுபடி தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய (TNHB) திட்டங்களின் கீழ் வீடு, மனை அல்லது குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, தவணை தொகையை செலுத்த தவறிய பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில், தமிழக அரசு ஒரு சிறப்பு வட்டி தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் பயனாளிகளுக்கு, அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

