தேனி மாவட்டம் சின்னமனூரில் முப்பெரும் விழா!!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பழமையான தொண்டு நிறுவனமான மகளிர் முன்னேற்ற சங்கம் (MMS) தனது 47 ஆம் ஆண்டு தொடக்க விழாவையும், சர்வதேச மகளிர் தின விழாவையும் மற்றும் சர்வதேச குழந்தைகள் புத்தக தின விழாவையும், ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக ஸ்ரீ ஆதித்யா டவர் மீட்டிங் ஹாலில் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் எம் எம் எஸ் செயலாளர் தேவபிரதிக் நோக்க உரை வழங்கினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை ஒருபோதும் பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்றும், அறியாமையை போக்கவும் தங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்லவும் கல்வி மிக முக்கியமான ஒன்று என்றும் கூறினார். போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி முன்னிலை வகித்ததுடன் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், இந்நிகழ்வில் முன்னாள் செயலாளர் பார்வதி, எழுச்சி பெண்கள் கூட்டமைப்பு சார்பாக பகவதி, செயலாளர் பிரபா, முன்னாள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மகளிர் முன்னேற்ற சங்கம் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சினைகளை கையாண்டுள்ளது‌ என்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிறுவனம் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள், சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் குழுக்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் தொகுப்புரை வழங்கினார். முன்னாள் பணியாளர்களின் விழிப்புணர்வு பாடல்களும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறுவனம் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது வரை செய்த மற்றும் செய்துவரும் செயல்பாடுகள், முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் அறிய புகைப்படங்கள் மக்களுக்கு திரையிட்டு காட்டப்பட்ட நிகழ்வு மூத்த பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்