லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ் தனது பிறந்தநாளில் தாய் தந்தையரை இழந்த இரண்டு மாணவிகளின் கல்வி செலவை ஏற்று பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்…

செங்கல்பட்டு மாவட்டம், சிங்காநல்லூர் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் சமூக சேவகர், சமூக போராளி சிங்கை கணேஷ் தனது பிறந்த நாளையொட்டி பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் தாய், தந்தையரை இழந்த இரண்டு மாணவிகளின் கல்விச்செலவை ஏற்று உரையாற்றுகையில், “ஒவ்வொருவரும் தனது பிறந்த நாளில் படிக்க வசதி இல்லாத ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டும்” எனவும் “பொதுமக்கள்அன்றாட பிரச்சினைகளை கையில் எடுத்து தொண்டு நிறுவனங்கள் மக்களுக்காக போராட வேண்டும்” எனவும் “நான் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தொடர்ந்து பொதுமக்களுக்காக பல்வேறு விதங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி பொது மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளேன், மேலும் வரும் காலத்திலும் எனது போராட்டங்கள் பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில்அதிக கவனம் செலுத்துவேன்” என்றும் தெரிவித்தார்.
நீங்களும் என்னோடு இணைந்து தோள் கொடுக்க வேண்டும் எனவும் தனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்க வந்த அனைத்து தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றுகையில் “சிங்கை கணேஷ் தனது பிறந்த நாளில் மாணவர்களின் கல்வி செலவு ஏற்று அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் வருங்காலத்தில் இவரின் சேவை மகத்தானதாக இருக்கும்” என்று சிறப்புரை ஆற்றிய அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி மகிழ்ந்தனர். இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், முக்கியபிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவகர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.