வணிகர் அதிகார பிரகடன மாநாடு!
பந்தல் கால்கோள்விழா
ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர்தின வணிகர் அதிகார பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. மாநாட்டு பந்தல் கால்கோள்விழா இன்று 5-4-2025 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் மாநாட்டுத் திடலில் பேரமைப்பின் மாநிலத்தலைவர் A.M.விக்கிரமராஜா தலைமையில் வணிகக்கொடியேற்று நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றினார். மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், காஞ்சி மண்டலத்தலைவர் எம்.அமல்ராஜ், மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.ஜெ.பிரபாகரன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் எம்.இந்திரஜித், மாநில துணைத்தலைவர்கள் என்.அப்துல்சமத், ஜி.பிரபாகரன், ஜி.டி.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர்கள் எம்.ஜெய்னுலாப்தீன், ஏ.வி.கே.உமாபதி, ஜெ.செல்வராஜ், எல்.வேலாயுதம், கே.பத்ரிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத்தலைவர்கள் கடலூர் டி.சண்முகம், திண்டுக்கல் டி.கிருபாகரன், கோயம்புத்தூர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், சேலம் எஸ்.வைத்திலிங்கம், தஞ்சை எல்.செந்தில்நாதன், திருச்சி எம்.தமிழ்ச்செல்வம், மதுரை டி.செல்லமுத்து, தூத்துக்குடி எம்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி டி.பி.வி.வைகுண்டராஜா, மாநில கூடுதல் செயலாளர்கள் ஏ.கே.வி.எஸ்.சண்முகநாதன், ஆர்.கே.காளிதாசன், பி.மகேந்திரவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பழையபொருள் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி, இளம் தொழில்முனைவோர் அமைப்பு, துணை நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா நன்றியுரையாற்றினார்.

கால்கோள் விழாவைத் தொடர்ந்து, பகல் 2 மணிக்கு மாநாட்டு உயர்மட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வணிக சுதந்திரம் என்பது, இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளை கடந்த நிலையிலும், பொருளாதாரத்தின் ஊற்றுக் கண்களாக இருக்கின்ற கீழ்த்தட்டு, அடித்தட்டு வணிகர்கள் என்றில்லாமல், ஒட்டுமொத்த வணிகர்களுக்கும். உற்பத்தியாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தங்களின் சுய அதிகாரம் மறுக்கப்பட்டு, இன்றளவும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அடிமைப்பட்டு கிடப்பதே நிதர்சனமான நிலைமை. சுருங்கச் சொன்னால் வணிகர்களுக்கான சட்டங்கள் இயற்றுவதிலிருந்து, குறிப்பாக வணிக வரி சட்டம், உணவுப்பாதுகாப்புச் சட்டம், தொழிலாளர் நலச்சட்டம், போன்றவற்றிற்கெல்லாம் வணிகர் தரப்பிலிருந்து எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல், இச்சட்டங்களால் வணிகர்கள் எதிர்கொள்ளும், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்திடாமல், இச்சட்டங்களால் எதிர்கொள்ளும் வழக்குகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதற்கான உபாயங்கள் இல்லாமல், அரசு, மற்றும் அதிகாரிகளின் எதேச்சதிகார நடைமுறை இன்றுவரை கையாளப்படுவது வேதனைக்குரிய நிலைமை ஆகும். இதனை எதிர்த்தே வணிகர்களுக்கான அதிகாரம் அடைவதற்கான வழிகளை உருவாக்கிடவே வணிகர் அதிகார பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற இருக்கின்றது. ஆட்சியாளர்களுக்கான அதிகாரம், வணிகர்களிடமிருந்துதான் என்பதை உணர்த்திடும் விதமாக மாநாட்டினை யிரம்மாண்டமாக நடத்தி வணிகர்களுக்கான அதிகாரத்தை வென்றிட ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்.

தொடர்புடைய செய்திகள்