வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் நேற்று பக்தர்களை அசிங்கமாக ஆபாசமாக வசை பாடிய ஜீயபுரம் டிஎஸ்பி பழனி: பொதுமக்கள் அதிருப்தி…

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடம், காவடி எடுத்தும் வழிபாடு செய்ய வருகை தந்தனர்
வழக்கமாக திருவிழா நாட்களில் தெற்கு வாசல் வழியாக பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்கள் நேற்று தெற்கு வாசல் திறக்காததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர், கோவில் நிர்வாகம் போதிய முன்னேற்பாட்டில் கவனம் செலுத்தாததால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் பக்தர் ஒருவர் நேர்த்தி கடனாக மொட்டை அடித்துக் கொண்டு கோயிலுக்குள் வரிசையில் நிற்காமல் செல்ல முயன்றார்.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி என்பவர், பக்தரை அநாகரிகமாக கோவில் என்றும் பாராமல் ஆபாசமாக திட்டினார்.
குறிப்பாக போடா… மயிறு மாரி பேசுற… கோயில்ல ஒழுக்கமா வாடா… போடா மயிறு போடா… செருப்பை கழட்டி இங்கே அடிச்சிடுவேன் போடா என ஆபாசமாக ஒரு காவல்துறை அதிகாரி பேசியது அங்கு இருந்த பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோவிலுக்குள் செல்ல முயலும் பக்தர் தவறாகவே நடந்து கொண்டாலும் அவரை சரியான வழியில் செல்ல காவல்துறையினர் நல்ல முறையில் அறிவுறுத்தி இருக்கலாம்.. ஆனால் இதுபோன்று ஆபாசமாக கடும் சொற்களால் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசியதற்கு தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.