உழவர் சந்தையில் இருந்து வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி…
மதுரையில் தற்போது அண்ணாநகர், சின்ன சொக்கிகுளம், பழங்காநத்தம் மற்றும் ஆனையூர் ஆகிய பூ இடங்களில் உழவர் சந்தைகள் செயலிபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் விற்பணையை கருத்தில் கொண்டு உழவர் சந்தையில் இருந்து வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் உள்ள உழவர் சந்தைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. விரைவில் மதுரையிலுள்ள உழவர் சந்தைகளில் இருந்து பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பணை செய்யும் திட்டம் தொடங்கப்படும். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், உழவர் சந்தைகளில் வெளிப்படைத் தனிமையை அதிகரிக்கும் பொருட்டு பதிவுசெய்த விவசாயிகளுக்கு எலக்ட்ராணிக்
தராசுகள் வழங்கப்படும்.
அணிணாநகர் உழவர் சந்தையிலிருந்து, மாட்டுத்தாவணி மார்க்கெட் வெறும் 2 கி.மீ. தொலைவே உள்ள போதிலும், பொது மக்கள் உழவர் சந்தைகளிவேயே காய்கறிகளை வாங்க விரும்புகின்றனர். இங்கு குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட போதிய சேமிப்பு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்