அரசு நியாய விலை கடை பணியாளர் வேலை நிறுத்த போராட்டம்…
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவரும் மாவட்ட தலைவருமான விபி தினகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை | நிகழ்த்தினார் டாஸ்மாக் மாநில செயலாளர் முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினார்.மாநிலச் செயலாளர் மாரிமுத்து கண்டன சிறப்புரை ஆற்றினார்.