உலக மலேரியா தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் அரசு ஐ.டி.ஐயில் மலேரியா விழிப்புணர்வு உறுதிமொழி…

முதுகுளத்தூர் அரசு ஐ.டி.ஐயில் மலேரியா விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பரமக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தொழில் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் அரசினர் தொழிற் பயிற்சி கூடத்தின் முதல்வர் குப்புசாமி முன்னிலையில் மலேரியா விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் இளநிலை பூச்சியில் வல்லுநர் பாலசுப்ரமணியன் தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள் குருநாதன், சேது பாஸ்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, சக்தி மோகன், சபரி முருகன், கருணாகர சேதுபதி, சதாம் உசேன், ஜெயச்சந்திரன், பூமீ ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மலேரியா குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் BREAKING முடிவில் அனைவரும் மலேரியா நம்மோடு முடிவடைகிறது என்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்