அபிராமத்தில் படித்த பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமத்தில் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு முன் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு (1992 – 1994) படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அந்த காலகட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது 50 வயதை எட்டி இருந்த போதிலும் ஆசிரியர், இன்ஜினியர், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என இருந்தாலும் அனைவரும் தான் படித்த பள்ளிக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இன்று அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்து ஒருவரை ஒருவர் சந்தித்து பாடல்கள் பாடி மகிழ்ச்சி அடைந்தனர்.தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களிடம் ஆசி வாங்கி நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் தாய், தந்தையரோடு சந்திப்பில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் தனது தாய் தந்தையரின் குரூப் போட்டோவை தன் மொபைல் போனில் பதிவு செய்து மகிழ்ந்தனர்.
பெண்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், நொண்டி ஆட்டம், தப்பா -ரைட்டா ஆகிய விளையாட்டுகளை விளையாடி உள்ளம் மகிழ்ந்து சிரித்து மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு கையசைத்து சந்தோஷ கடலில் மூழ்கினர். பின்னர் மதியம்
அசைவ விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்