தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டிமுன்னேற்பாடு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன்ஆய்வு மேற்கொண்டார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் சேலம் மாவட்டம், இரும்பாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் இன்று (09.06.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.