கமுதி தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கமுதி தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு, அப்பள்ளியின் விடுதி காப்பாளர் இளைஞர் கவியரசன் (23)
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் ராஜலெட்சுமி நேற்று முன்தினம் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விடுதி காப்பாளர் கவியரசன் மீது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.