கமுதி அருகே திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில்தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்.

கமுதி அருகே திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில்
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம்
பகுதியில் திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கலைஞர் 102-வது
பிறந்தநாள் விழா மற்றும்
திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி,
வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா,
துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.கழக இளம் பேச்சாளர் காயத்திரி தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள்
குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் அவைத்தலைவர் ராஜேந்திரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ் துணைத் தலைவர் அய்யனார், மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன்,
காசிலிங்கம்,நந்தகோபால்,
ஒன்றிய பொருளாளர் முத்து,ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம்,
முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜிசரவணன்,பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன்தனிக்கோடி,
ஒன்றிய கவுன்சிலர் ஜெயராஜ், மகளிரணி பூங்கொடி உட்பட 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்