கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமித் இப்ராஹிம் தலைமையிலும், அறக்கட்டளை இயக்குனர் எஸ்.எம். ஏ.ஜே.ஹபீப் முஹம்மது,எஸ். ஹீசைன் ஜலால்,ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வி.நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக ICT அகாடமியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.தற்பொழுது இந்தக் கல்லூரி தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.இதன் மூலம் பல புதிய வேலை வாய்ப்பிற்கு துறைகளை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்கலாம். இந்தக் கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக மாறுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்