தேசிய நெடுஞ்சாலை பணியை தடுத்த பாஜக பிரமுகர்கள் 8,பேர் கைது.
தேசிய நெடுஞ்சாலை பணியை தடுத்த பாஜக பிரமுகர்கள் 8,பேர் கைது,
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் சென்னை (டு) கன்னியாகுமரி தொழில் வழி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிக்காக விவசாய நிலங்களை மக்கள் நலத்திட்டத்தின் அடிப்படையில் கையகப்படுத்தி போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக சாலை விரிவாக்க பணி அரசு மேற்கொண்டு வருகிறது,
அதனைத் தொடர்ந்து
இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பிரமுகர்கள் சிலர் சாலை பணியை செய்ய விடாமல் பணியாளர்களை தடுத்து தகராறில் ஈடுபட்டு பொக்லைன் கண்ணாடியை சேதப்படுத்தியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியது, இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் சரக போலீசார் தகராறில் ஈடுபட்ட பாஜக நபர்களை கைது செய்தனர், மேலும்
இந்நிகழ்வின் விளைவாக சாலை விரிவாக்க பணியை எதிர்த்து பாஜக பிரமுகர்
எச், ராஜா தலைமையில் கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வருகின்ற 2.ஆம் தேதி புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வந்துள்ளது,
