ராமநாதபுரத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சிறப்பு மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சிறப்பு மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மன்சூர் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. அப்போது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர்.
