கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அமுதா தம்பதியின் மகன் தேவராஜன், வயது, 20 இவர் ஒட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது.

கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அமுதா தம்பதியின் மகன் தேவராஜன், வயது, 20 இவர் ஒட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது, இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தேவராஜனை அப்பகுதியினர் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார், இதனைத் தொடர்ந்து அவரது உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பெற்றோர் ஒப்புதலின் பேரில் இளைஞர் தேவராஜன் கண்கள் மதுரையில் உள்ள கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்