முதுகுளத்தூரில் ஒரேநாளில் மின்கம்பம் வாறுகால் பராமரிப்புபணி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் SBI வங்கி முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது.
முதுகுளத்தூரில் ஒரேநாளில் மின்கம்பம் வாறுகால் பராமரிப்புபணி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் SBI வங்கி முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதற்காக பேரூராட்சி நிர்வாகம் மூலம் முதல் நாள் கடை உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒலிப்பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பணியின் போது பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இருந்தனர். இந்நிலையில்ஸ்டேட்பேங்க் அருகில் மின்கம்பம் மின்வயர் மாற்றும் வேலையால் காலை முதல் மாலை வரை மின்சாரமும் தடைசெய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
