பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்டம்
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று (28.06.2025) மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ம.பிரபாகரன் (பெரம்பலூர்), திரு.கு.சின்னப்பா (அரியலூர்), திரு.க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமை தொடங்கி வைத்து மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வேலைவாய்ப்பிற்காக நீண்டகாலம் பதிவு செய்து காத்திருப்பவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் மூலம் ஆண்டிற்கு இருமுறை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்கள் வேலைநாடுநர்களும் வேலையளிப்பவர்களும் நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு இணைப்புப்பாலமாக செயல்படுகிறது. மேலும், இம்முகாம்கள் வேலைநாடுநர்கள் அவர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை அறிந்து அவர்களை தயார் செய்து கொள்ளவும் உதவுகிறது. மேலும், முகாம் நடைபெறும் நாளிலேயே பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படுவது இத்திட்டத்தின் தனி சிறப்பம்சமாகும்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடைபெற்ற 2,049 வேலைவாய்ப்பு முகாம்களில் 60,057 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு வரப்பெற்ற 13,57,099 வேலை நாடுநர்களில் 2,49,392 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர். திறன் குறைபாடு காரணமாக பணி நியமனம் பெற இயலாதவர்கள் முகாம்களிலேயே கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக திறன் எய்தும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களும் பணி நியமனம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அரசுதுறைகளில் பணிவாய்ப்பு பெற இளைய சமுதாயத்தினரை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக, இதுபோன்ற பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.பெரம்பலுார் மாவட்டத்தில் 07.05.2021 முதல் மே-2025 வரை நடைபெற்ற 49 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 27,561 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு 5,088 வேலை நாடுநர்கள் பணி நியமனம் பெற்று பயனடைந்தனர். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 31.05.2025 வரை 14,636 ஆண்களும் 18,448 பெண்களும் ஆக மொத்தம் 33,084 பதிவுதாரர்களும், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 16,960 ஆண்களும் 21,315 பெண்களும் ஆக மொத்தம் 38,275 பதிவுதாரர்களும் வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்களால் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது மட்டுமின்றிதொழில்நெறி வழிகாட்டல். நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு, திறன்பயிற்சி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் கண்காட்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சிநிறுவனங்கள் கலந்துக்கொண்டு சுமார் 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும்இம்முகாமில் கலந்துக்கொண்டு பணி நியமனம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய முகாமில் 1,217 ஆண்களும், 1,494 பெண்களும் என மொத்தம் 2,711 நபர்கள் கலந்துகொண்டார்கள். இதில்124ஆண்களுக்கும், 147 பெண்களுக்கும் என மொத்தம் 271 நபர்கள் வேலைவாய்ப்புக்கான பணிநியமனஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்த முகாமில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 406 நபர்கள் தேர்வாகியுள்ளனர். என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், ஆட்மா தலைவர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திரு.இரா.அருணகிரி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.லி.சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்