கும்பகோணம் மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ,இ,அதிமுக சார்பில் மாவட்டம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ,இ,அதிமுக சார்பில் மாவட்டம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்
ஜூலை: 4- கும்பகோணம் மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தஞ்சை கிழக்கு மாவட்ட அ,இ,அதிமுக சார்பில் மாபெரும் மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் குடந்தை காந்தி பூங்கா எதிரே நடைபெற்றது, ஆர்ப்பாட்டமானது காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்டு பிற்பகல் 1, மணி வரை நடத்தப்பட்டது,

ஆர்ப்பாட்டத்திற்கு மு, அரசு கொறடா கழக அமைப்பு செயலாளர் திருச்சி மனோகரன் தலைமை வகித்தார், மற்றும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர், கே, பாரதி மோகன், கும்பகோணம் மாநகர கழக செயலாளர் ராமநாதன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதிமீனா பி, எஸ், சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முக்கிய நிர்வாகிகள் பேசியதாவது கும்பகோணம் மாநகராட்சியின் அவல நிலைகளை எடுத்து பகுதி வாரியாக பட்டியலிட்டு திமுக திராவிட மாடல் அரசை கடுமையாக விமர்சித்தும் கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்தும் மாநகராட்சி துணை மேயர் சு,ப தமிழழகன் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று குடந்தை மாநகராட்சியில் எண்ணற்ற முறைகேடுகளை செய்திருக்கிறார் எனவும் பட்டியலிட்டு அதிமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்,

மேலும் கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல் பம்பிங் செக்ஷன் சரியாக செயல்படாமல் 80 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் 30 நபர்கள் மட்டுமே பணிபுரிவதாக தெரிவித்து பராமரிப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாக்கடை நீர் சாலைகளில் கரை புரண்டு ஓடுவதாகவும் சுகாதார சீர்கேடுகள் ஆளும் திமுக அரசை தலை தலை குனிய செய்கிறது எனவும் தெரிவித்தனர்,

மேலும் பாசன வாய்க்காலில் கழிவுநீர் குடிநீரில் கலப்பதை தடுக்க தவறிய மாநகராட்சி நிர்வாகத்தையும் மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதிகளை மக்கள் நலத்திட்டங்கள் செய்யப்படாமல் கையாடல் செய்யப்படுகிறது எனவும் நலத்திட்டங்கள் நடைபெற்றதாக போலிக் கணக்கு எழுதப்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்,

அதனைத் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தாராசுரம் மாத்தி வாய்க்காலை தூர்வாராததை கண்டித்தும் துவரங்குறிச்சி, எலுமிச்சங்காபாளையம், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அரசலாறு பாலத்தை அகலப்படுத்த வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது,

பின்னர் கும்பகோணம் மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் சிதலமடைந்த நிலையில் எந்த விதமான பாராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் படிக்கும் மாணவர்களின் ஆபத்தோடு மாநகராட்சி நிர்வாகம் விளையாடுவதாகவும் பள்ளிக்கூடங்கள் சீரமைக்க ஒதுக்கிய நிதிகள் என்ன ஆனது என்றும் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 1, கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே சென்றது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர் எனவும் கடுமையாக ஆட்சியாளர்களை விமர்சித்து குற்றம் சாட்டியுள்ளனர்,

தொடர்ந்து பேசிய மாநகர கழக செயலாளர் ராமநாதன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் மக்கள் விழித்துக் கொள்வார்கள் திமுக ஆட்சியாளர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விரைவில் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது,

முன்னதாக
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக்குமார் மாவட்ட கழகத் துணை செயலாளர் தவமணி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி,முத்துகிருஷ்ணன் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் க, அறிவழகன் திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி, உடன் பகுதி கழக செயலாளர் பத்ம குமரேசன், தமிழ்ச்செல்வி வீரமுத்து, கே ராஜு, உட்பட மாவட்ட மாநகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் என பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்,

தொடர்புடைய செய்திகள்