செங்கல்பட்டில் அசுர வேக மண் லாரிகளால் அச்சம்.

செங்கல்பட்டில் அசுர வேக மண் லாரிகளால் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொண்டங்கலம் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 25ம் தேதி முதல், ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, 800க்கும் மேற்பட்ட, ‘டாரஸ்’ லாரிகளில் மண் எடுக்கப்பட்டு சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், இந்த டாரஸ் லாரிகள் தார்ப்பாய் மூடாமல், வேகமாக செல்வதால் விபத்து ஆபத்து நிலவுகிறது. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி இந்த சாலையில் உள்ள நிலையில், வேகமாக செல்லும் லாரிகளால் மாணவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால், இச்சாலையில் பள்ளி நேரத்தில் லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்