கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கும்விழா

ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
நேற்று மாலை 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகித்தார். கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மற்றும் கழக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,
நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொது மக்களுக்கான அசைவ அன்னதானத்தை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், 5000 ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலைகள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. விழாவில் 10 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்

தொடர்புடைய செய்திகள்