பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லறிக்கை, காடூர், புதுவேட்டைக்குடி, கைப்பெரம்பலூர், கி.குடிக்காடு, பழைய அரசமங்கலம், வடக்கலூர், காருகுடி, சின்னபரவாய், எழுமூர், பீல்வாடி, சித்தளி ஆகிய கிராமங்களில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (10.07.2025) ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கிராமப்புற பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஒவ்வொரு கிராமங்களிலும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து பூர்த்தி செய்து வருகிறோம் இது மக்களுக்கான அரசு அதன் அடிப்படையில் தான் இன்று கூட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொது மக்களுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் காடூர், புதுவேட்டைக்குடி, வடக்கலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நல்லறிக்கை முதல் இலுப்பையூர் வரை ரூ.99.90 லட்சம் மதிப்பீட்டிலும், நல்லறிக்கை முதல் புதுக்குடிசை வரை ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், புதுவேட்டைக்குடி – பென்னகோணம் சாலை முதல் கீழக்குடிக்காடு வரை ரூ.92.80 லட்சம் மதிப்பீட்டிலும், கிழுமத்தூர் குடிக்காடு முதல் கைப்பெரம்பலூர் வரை ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணியினையும், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுவேட்டைக்குடியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் 470 மீட்டர் தூரமுள்ள ஆதிதிராவிடர் மயான சாலையினை மேம்படுத்தும் பணியினையும், காருகுடி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணியினையும், சித்தளி ஊராட்சியில் பீல்வாடி முதல் ஆதிதிராவிடர் மயானம் வரை ரூ.16.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும்,15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் காருகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் புதுவேட்டைக்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் முதல் ஆதிதிராவிடர் தெரு வரை ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, கைப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும், கிழுமத்தூர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை அமைக்கும் பணியினையும், பழைய அரசமங்களத்தில் 80 குடும்பங்களுக்கு பைப்லைன் மற்றும் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணியினையும், சின்னபரவாய் கிராமத்தில் செங்கமலை வீடு முதல் சின்னப்பொண்ணு வீடு வரை ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கவர் ஸ்லாப் அமைக்கும் பணியினையும், எழுமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணியினையும்,
பீல்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலா ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணியினையும், சித்தளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணியினையும், சித்தளி ஊராட்சி பிசி மயான பாதையை ரூ.16.00 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையாக மேம்படுத்தும் பணியினையும், சித்தளி ஊராட்சி நடுத்தெருவில் சுதா வீடு முதல் மாலதி வீடு வரை ரூ.6.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.86 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் அவர்கள் குன்னம் பேருந்து பணிமனைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திடும் விதமாக ஊராட்சி பொது நிதியில் ரூ.6.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் மற்றும் தரைத்தளம் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பேருந்து பணிமனையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல்பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.துரைசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமதி.மரகதவல்லி குன்னம் துணை மேலாளர் திரு.சுரேஷ் பார்த்திபன், கிளை மேலாளர்கள் திரு.எட்வர்ட் கென்னடி, திரு.குணசேகரன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அறிவழகன், திரு.சேகர், குன்னம் வட்டாட்சியர் திரு.சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


