சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் ‘பேக்’ ஒன்று கிடப்பதாக மரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சவுரி ராஜனுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அவர், கிராம உதவியாளருடன் அங்கு சென்று பேக்கை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 12 கிலோ எடை உள்ள விதை இலை, பூ மற்றும் தண்டுடன் நொறுக்கிய நிலையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து அந்த பேக்கில் இருந்த ரூ. 14 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்..

தொடர்புடைய செய்திகள்