கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாய வணிக கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி – கண்ணார்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு அறிவுறுத்தலின் பேரில்,
நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் (பொது விநியோக திட்டம்) தலைமை தாங்கினார். கூட்டுறவு சார்பதிவாளரும்,
கள அலுவலருமான சண்முகப்ரியா மற்றும் இச்சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொது மேலாளர் போஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.மேலும் கருத்தரங்கில், விவசாயிகளிடம் இருந்து கிடைக்கும் விளைபொருள்களான நெல், மிளகாய், மல்லி மற்றும் கம்பு, சோளம், பருத்தி போன்றவை நல்ல விலையில் விற்பனை செய்து தருவது மற்றும் விவசாய பொருள்கள் நல்ல விலை கிடைக்காத நேரத்தில் சேமித்து வைப்பது குறித்தும், மேலும் விளை பொருள்களின் மீது கடன் வசதி செய்து தருவது, விவசாய நேரத்தில் விவசாய உபகரணம் வசதி ஏற்படுத்தி தருவது, இதே போல் வியாபாரிகளுக்கு வசதியாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருள்கள் மொத்தமாக கொள்முதல் செய்து தருவது மற்றும் வெளி மாநில, மாவட்டங்களுக்கு விற்பனை வசதி செய்து தருவது குறித்தும் இந்த
கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அதற்கான விளக்கத்தை அதிகாரிகள்
எடுத்துரைத்தனர். இதில்
கமுதி சுற்று வட்டாரத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்