பவானி ஆற்றின் கரையில் சாயப்பட்டறை அனுமதியை ரத்து செய்ய சட்டசபையில் எம்எல்ஏ செங்கோட்டையன் கோரிக்கை…

கோபிசெட்டிபாளையம் பவானி ஆற்றின் கரையில் சாயப் பட்டறை செயல்படுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சாயப்பட்டறையின் கழிவுகள் ஆற்றில் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் நிதி நிலை அறிக்கை தனியே தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிதிநிலை அறிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களில் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்தனர்.

இதனையடுத்து, சட்டசபையின் தொடக்கத்தில் பல்வேறு துறைசார்ந்த கோரிக் கைகளை எம்.எல்.ஏக்கள் முன்வைத்தனர். பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் சாயப்பட்டறை இயங்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானி ஆற்றின் கரையில் இருந்து 500மீ தூரத்தில் சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்