பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்…
சேலம், பாஜக மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன் சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று ஓமலூரில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் 100 மடங்கு எழுச்சியுடன் வென்று காட்ட வேண்டும். அகில இந்திய தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வேண்டும், கடுமையாக தேர்தலுக்காக உழைக்க வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.