சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு…
சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கும்பகோணம் எல் பி எஸ் சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் அம்பேத்கர் ஜெயந்தி விழாவை கொண்டாடும் விதமாக புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தங்கம் கென்னடி தலைமை வகித்தார். மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பி,எல்,அண்ணாமலை, சாக்கோட்டை என்,சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோழராஜன்,மாவட்ட துணைத் தலைவர் ஏ, வேத செல்வம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கும்பா வெங்கடாச்சாரி, பொன்ராஜ் தேவர் முன்னாள் மாநகரத் தலைவர் கல்கண்டு ரெங்கராஜன், ராதாகிருஷ்ணன், திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் திலகவதி, ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர், இதைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் சாதனைகளை நினைவு கூறும் வண்ணமாக காணொளி காட்சி மூலம் அண்ணல் அம்பேத்கர் வரலாறுகளையும் பாஜக அரசு செய்த சாதனைகளையும் திரைப்படக் காட்சியாக அமைக்கப்பட்டு அதை நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து பார்வையிட்டனர். மேலும் அம்பேத்கரின் பெருமைகளையும் வரலாறுகளையும் அவர் செய்த சாதனைகளையும் நிர்வாகிகள் தெரிந்து கொள்ளும் விதமாக மாட்ட தலைவர் தங்கம் கென்னடி அவர்கள் விளக்க உரை ஆற்றினார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர், நிகழ்ச்சியின் முடிவில் பிரச்சார பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர், ராஜா மணிகண்டன், அனைவருக்கும் நன்றி உரை வழங்கினார்.