மதுரை சமயநல்லூர் அருகே 31 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் ஜோயல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் மிருகம் ஒன்று கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் இதன் தகவல் அறிந்த மதுரை மாட்டுத்தாவணி வனசரக வனத்துறையினர் ஜோயல் என்பவரது தோட்டத்திற்கு வந்து சோதனை செய்த போது சந்தேகத்தின் பெயரில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையின் போது திண்டுக்கல் நத்தம் அருகே லிங்கவாடி பகுதியைச் சேர்ந்த மணி (70) மற்றும் ராமையா (43) இவர்களிடமிருந்து பன்றிக்காக வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டு கைப்பற்றி சமயநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் தற்போது சமயநல்லூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்